திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல்லில் சிறப்புவாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ரிஷப ஹோமம் காலை 5 மணி அளவில் […]
