கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிமங்கலம் கிராமத்திற்கு அருகே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றுக்கும், ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மணிமுத்தா ஓடைக்கும் இடையே விவசாய நிலம் இருப்பதால் ஓடையை கடந்து விவசாயிகள் விளைநிலத்திற்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் அதே ஊரில் வசிக்கும் விவசாயிகளான மகாலிங்கம், வீரமுத்து, அவரது மனைவி கொளஞ்சி, ராஜமாணிக்கம் ஆகியோர் ஓடை வழியாக கால்நடைகளை ஒட்டி விவசாய நிலத்திற்கு சென்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் மாலையில் வீடு திரும்ப முயன்ற […]
