ஓ.பி.எஸ் வெளியிட்ட ஆடியோவால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.முக. கட்சியின் மூத்த தலைவராக பொன்னையன் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இது தொடர்பான ஆடியோவை ஓ.பி.எஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கட்சி தலைவர்கள் எல்லாம் பணத்தின் பக்கம் நிற்பதாகவும், தொண்டர்கள் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரவர் பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக டெல்லியில் பிடித்து தொங்குகின்றனர். அதன்பிறகு […]
