ஆஸ்திரேலியா நாட்டில் கேன்பெர்ரா என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை அடுத்து, மத்திய காவல்துறை படை அதிரடியாக செயல்பட்டு விமான நிலையத்திலிருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை […]
