இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
