நெஞ்சுவலி ஏற்பட்டு பணியில் இருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரன் பணியில் இருந்தபோது பேருந்தில் குடித்துவிட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்திரனும் அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு […]
