தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்தூர் அருகே வல்வினள பகுதியைச் சேர்ந்த மீனவர் ஏசுதாசன் (53) நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மீன் பிடிப்பதற்காக தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து 4 பேருடன் வள்ளத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற வள்ளத்தின் மீது எதிர்பாராத விதமாக வீசிய ராட்சத அலையால் வள்ளம் கவிழ்ந்தது. இதனால் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். மற்ற நபர்கள் கடலில் […]
