தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் குழுவினர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
