டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்க மாவட்ட தலைவரான வேல்முருகன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஊழியர்கள் 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், மாநில குழு உறுப்பினர், மாவட்ட பொதுச் […]
