சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியின் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து […]
