தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ளது. திங்கள்கிழமை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் புழல் ஒன்றியம் […]
