ஆப்கானிஸ்தானின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வான்படை தாக்குதலை அதிகரித்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்கள் “அரசு மூத்த அலுவலர்கள் கொலை செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து அரசின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். […]
