தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]
