ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் உதவி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் சென்ற வெள்ளிக்கிழமை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தூத்துக்குடி முதன்மை நீதிபதி குருமூர்த்தி வாடகை கட்டிடத்தில் திறந்து வைத்தார். இதன்பின் பட்டுப் பண்ணை அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு இரண்டு இடத்தை நீதிபதி மற்றும் ஆட்சியர் பார்வையிட்டார்கள். அப்போது ஓட்டப்பிடாரம் நெல்லை சாலையில் அரசு இடத்தை அவர்கள் […]
