தார்ச்சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருக்கும் வண்டகப்பாடி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் சாலை வசதி அமைத்துத் தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக மட்டப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டகப்பாடி கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை […]
