வேலை பறிபோனதால் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல்-அஜிதா. அஜிதா திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வந்தார் . இந்நிலையில் அஜிதாவிற்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஜிதாவை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் […]
