தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். […]
