தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தேனிக்கோட்டையில் இருந்து தர்மபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அப்போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் 2 வயது பெண் குழந்தையை முன் பக்க இருக்கையில் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார். அதன் பிறகு பேருந்த புறப்பட தயாரான நேரத்தில் குழந்தை அழுதது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை சக பயணிகள் தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. அதனால் பேருந்து நிலையத்தில் […]
