குடும்பத்தகராறு காரணமாக தாய் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சத்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுபஸ்ரீ என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகந்தி தனது குழந்தையுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து […]
