ஆந்திர மாநிலத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செஞ்சுலம்மா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவரது மகன் தனது தாயை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]
