தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரத்தில் ராக்கம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நாகலட்சுமி(44) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக ராக்கம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். […]
