இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]
