விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அசோதை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல் என்ற மகனும், செல்வி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி தனது குழந்தைகளோடு பெங்களூருக்கு சென்று விட்டார். இரவு நேரத்தில் அசோதை மண்ணம்மாள் என்பவரது வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் […]
