சென்னை திருவொற்றியூர் ராமானுஜம்நகர் ஒத்தவாடை பகுதியில் வசித்து வந்தவர் மீனா (53). அச்சகத் தொழில் நடத்திவந்த இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சென்ற ஒரு சில வருடங்களாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. இதில் மீனா சமூகசிந்தனையும், பல முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர் ஆவார். […]
