தாயாரிடம் தகராறில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமணன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் இவருடைய தாயாரான பாலம்மாளிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாலம்மாள் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணனை கைது […]
