இந்திய தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியை நிறுத்தியுள்ளன. அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைப் பார்க்க சென்றிருந்த இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் குவைத்திற்கு வேலை பார்க்கச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற பல்வேறு […]
