மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்மிரிதி இராணி, “நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியது இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என கருதுவதும் நல்லது அல்ல. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விரிவாக விவாதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
