இங்கிலாந்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்த காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கிலாந்தின் சன்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி தாமாக முன்வந்து சரணடைந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர் மீது பல குற்ற சம்பவங்களில் கீழ் புகார்கள் இருக்கிறது. இதனால் இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது இவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். […]
