தாமரைக்குளம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர். தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]
