மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் படுக்கை அறையிலிருந்து மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் […]
