வெந்நீரில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதில் தனுஷ் என்ற மகன் இருந்தார். இந்த சிறுவனை குளிப்பாட்டுவதற்காக அவரது தாய் வெந்நீர் வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த தனுஷ் எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்து இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டார். இதனால் சிறுவனின் உடலில் வெந்நீர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெற்றோர் […]
