தாசில்தார் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஓப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நையினார் கோவில் சாலை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு மணல் அள்ளி சென்ற டிராக்டரை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மணல் அனுமதியின்றி சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என […]
