லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியில் இளமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இளமுருகன் தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் இறப்பு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என இளமுருகனிடம் கேட்டுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான […]
