திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கொருக்கை ஊராட்சியில் உள்ள கண்ணன் மேடு மேலத்தெருவில் சுமார் 110க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். அப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் மேல தெருவில் ஒருகாலத்தில் குளம் இருந்ததாகவும், அதனை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது […]
