புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் […]
