சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வரவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று சட்டப்பேரவையில் நீதிமன்ற கட்டணம் தொடர்பாக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் முக ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். இதில் திடீரென்று எழுந்து குறுக்கிட்டு பேசிய முதல்வர் சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும் என்று கூறினார். திமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் […]
