குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வாங்கவும் பணம் இல்லாமல் தவித்து வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை இல்லாத நிலையில் அனைத்து பொருட்களும் விலை சரமாரியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பஞ்சத்தின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று 5 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 15 பேர் அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். அப்போது யாழ்ப்பாணம் […]
