பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை நேர்மையாக திருநங்கை ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் திருநங்கை ஸ்வீட்டி என்பவர் பயணிகளிடம் பிச்சை எடுப்பதற்காக அங்க நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினார். அப்பொழுது ஒரு இருக்கையின் அடியில் பர்ஸ் கிடப்பதை பார்த்து அதை எடுத்து திறந்து பார்த்தபொழுது ரூபாய் 5000 மற்றும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்வீட்டி அந்த பர்ஸை எடுத்து […]
