போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் பெண்ணுக்கு கண் பார்வை பறி போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா பாக்கியஜோதி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரஷீத் என்பவர் வைத்துள்ள எஸ் .ஆர்.எம் . மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஷீத் ரெஜிலாவிற்கு 20 நாட்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ரெஜிலாவின் உடல்நிலை மோசமாகி உள்ளது. […]
