கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று எண்ணப்பட்டது. அதில் 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும் 284 வாக்குகளை பெற்றனர். இதன் காரணமாக வார்டு உறுப்பினர் தேர்தல் குலுக்கள் மூலம் நடத்தப்பட்டது. அதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரி திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதையடுத்து […]
