ஏடிஎம் அருகே கிடந்த பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார் உணவக ஊழியர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகே இருக்கும் நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப மருத்துவச் செலவிற்காக திருச்சுழி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஏடிஎம் மையத்தில் 20 ஆயிரம் ரூபாய் எடுத்து இருக்கின்றார். பின் பஜார் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்த போது அதில் 5000 ரூபாய் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தவறவிட்ட பணத்தை […]
