அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்கள் கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பதற்காக உறுதியேற்று இந்த கூட்டணியில் கைகோர்த்து இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வரலாறு காணாத வெற்றியை திமுக கூட்டணி பெற இருக்கிறது.திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, சனாதனிகளுக்கு இங்கே எக்காலத்திலும் வேலை இல்லை என்று விரட்டி அடிக்க கூடிய […]
