தளவானூர் அணைக்கட்டு பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு உடைந்து சேதமடைந்ததால் அதில் கட்டப்பட்டிருந்த மூன்று மதகுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் அவர்கள் வெடிவைத்து தகர்க்க பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து பேசிய அவர் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் அரிப்புகள் ஏற்படாத வண்ணம் மணல், கட்டைகள் மற்றும் மணல் மூடைகளை […]
