அஜித்தின் 62-வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. மேலும் நடிகர் அஜித்தின் 62-வது படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
