நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, பா.ஜ.க. மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே எந்த பிரச்சினையும் கிடையாது. தொடர்ந்து நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது ஏற்புடையது இல்லை. எங்களுடைய தலைவர் அண்ணாமலை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மொழிக் கொள்கையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை […]
