ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் என்ற நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ஹசாரா சமூகத்தினுடைய தலைவரான அப்துல் அலி மஸாரின் சிலையை தலீபான்கள் தகர்த்ததாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைப்பார்கள். இதற்கு முன்பு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த சமயத்தில், ஹசாராக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை தலிபான்கள் கடந்த 1995-ஆம் வருடத்தில் தூக்கிலிட்டார்கள். அதன்பின்பு, பாமியான் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. எனினும் ஹசாரா இன மக்கள் மீது […]
