தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. […]
