உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி தரக்குறைவாக விமர்சித்த பாரதிய ஜனதா தலைவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண்ணை நான்கு நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்திரவதை செய்து கொலை செய்து கொடூரத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண் […]
