உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன், பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் நிலையின் பரிசோதனைக்கான முடிவுகள் வெளியானது. இதில் கொரோனாவை எதிர்த்து 77.8% செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா வைரஸை எதிர்த்து 65.2% செயல் திறன் கொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் சுமார் 25 நகர்களில் கொரோனாவால் பாதிப்படைந்த 130 நபர்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசியின் […]
