தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் […]
